திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 17 அக்டோபர் 2019 (18:33 IST)

மோடி பயந்துபோய் மாறுவேடத்தில் வந்தார் - உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

சமீபத்தில் தமிழகத்திற்கு முறைசாரா உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வந்த பாரத பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை மகாபலிபுரத்தில் சந்தித்தார். அப்போது, தமிழர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி சட்டை அணிந்து வந்து அனைருக்கும் ஆச்சர்யம் அளித்தார். அனைத்து மீடியாக்களும் கவர் செய்து வைரலாக்கினர்.தமிழர்களும் மோடியின் செயலை பெரிதும் பாராட்டினர்.
இந்நிலையில் இன்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மோடி வேட்டி சட்டை அணிந்து வந்தது பற்றி கூறியுள்ளதாவது :
 
பிரதமர் மோடி  தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு பயந்துதான் வேஷ்டி சட்டை அணிந்து தமிழகத்திற்கு மாறுவேடத்தில் வந்தார் என தெரிவித்துள்ளார்.