தமிழக இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
தமிழக இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பிரதமர் மோடி புகழாரம்!
தமிழகத்தைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாள் பிரதமர் மோடி தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று மான்கி பாரத் என்ற வகையில் பொது மக்களுடன் உரையாடி வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்
அந்த வகையில் இன்று அவருடைய உரையாடலில் திருப்பூரைச் சேர்ந்த இளநீர் வியாபாரி தாயம்மாளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்
திருப்பூர் அருகேயுள்ள சின்னவீரம்பட்டி அரசு பள்ளியை சீரமைக்க தான் இளநீர் விற்று சேமித்த ரூபாய் ஒரு லட்சத்தை நன்கொடையாக அளித்து உள்ளார் என்ற தகவலை அடுத்து பிரதமர் மோடி அவருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது