செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 27 ஜனவரி 2022 (16:07 IST)

முழுமையாக டாடா வசமான ஏர் இந்தியா! – ஒப்படைத்த பிரதமர் மோடி!

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா இன்று முறைப்படி முழுமையாக டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்திய பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா கடனில் சிக்கிய நிலையில் அதை தனியாருக்கு விற்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி டாடா குழுமம் ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த அக்டோபர் 8ம் தேதி ரூ.18,000 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

எனினும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முழுமையான கட்டுப்பாடுகள் டாடாவை சென்றடையாமல் இருந்தது. முழு கட்டுப்பாட்டையும் அளிப்பதில் சிக்கல்கள் நிலவி வந்ததால் கால தாமதமானது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியை டாடா குழுமத் தலைவர் சந்திரசேகர் நேரில் சந்தித்துள்ளார். அப்போது ஏர் இந்தியாவின் முழு பொறுப்பும் டாடாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏர் இந்தியா முழுவதும் தற்போது டாடா கைவசம் வந்துள்ளது.