வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 15 டிசம்பர் 2022 (08:04 IST)

நடமாடும் இடுகாடு வசதி.. வீட்டுக்கே வந்து பிணம் எரிப்பு!

cremation
நடமாடும் இடுகாடு வசதி.. வீட்டுக்கே வந்து பிணம் எரிப்பு!
தமிழகத்தில் முதல் முறையாக நடமாடும் இடுகாடு வசதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஈரோட்டில் உள்ள தன்னார்வ அமைப்பு ஒன்றுடன் சேர்ந்து ஈரோடு மாநகராட்சி இந்த ஏற்பாட்டை செய்துள்ளது
 
25 லட்சம் ரூபாய் செலவில் செய்யப்பட்டுள்ள நடமாடும் இடுகாடு இயந்திரத்தை வீடுகளுக்கு சென்று பிணங்களை எரித்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியை சம்பந்தப்பட்டவரிடம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது
 
இந்த சேவைக்காக 7,500 ரூபாய் கட்டணம் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல் கட்டமாக ஈரோட்டில் இந்த வசதி செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக ரோட்டரி கிளப் உடன் இணைந்து தமிழகம் முழுவதும் இந்த வசதியை செய்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
Edited by Siva