திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 டிசம்பர் 2022 (19:44 IST)

ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரியில் தூக்கி சென்ற கொள்ளையர்கள்: அதிர்ச்சி சம்பவம்

Atm
பெங்களூரில் ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரி மூலம் தூக்கி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏடிஎம் இயந்திரத்தை பல்வேறு விதமாக நவீன தொழில்நுட்பத்தில் கொள்ளையர்கள் கொள்ளையடித்து வரும் சம்பவம் குறித்த தகவல்களை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் பெங்களூர் பகுதியில் பேங்க் ஆப் பரோடா ஏடிஎம் இயந்திரத்தை பெயர்த்து மினி லாரியில் எடுத்துச் சென்ற கும்பல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது
 
அந்த ஏடிஎம் எந்திரத்தில் 3.13 லட்சம் பணம் இருந்ததாகவும் பணத்தை திருடிவிட்டு இயந்திரத்தை நகருக்கு வெளியே தூக்கி வீசி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் 4 பேர் தலைமறைவாக இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva