திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:00 IST)

இந்த மாதிரி நாங்களும் பள்ளிகள் உருவாக்குவோம்! – வியந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள அரசு பள்ளிகளை போல தமிழகத்தில் உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் முறை பயணமாக டெல்லி சென்றுள்ள நிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்.
இன்று டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவாலை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அவற்றின் நவீன கட்டமைப்புகளை பார்வையிட்டார்.

பின்னர் பேசிய அவர் “டெல்லி அரசு பள்ளிகளை போல் தமிழ்நாட்டிலும் பள்ளிகளை உருவாக்க போகிறோம். எல்லா துறைகளையும் போல் தமிழக அரசு கல்வி மற்றும் சுகாதார சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. நாளை நடைபெறும் திமுக அலுவலகம் திறப்பு விழாவில் டெல்லி முதல்வர் பங்கேற்பார் என்று உறுதியாக நம்புகிறேன், அவருக்கு மாநில மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.