தங்க.தமிழ்ச்செல்வனை தூண்டில்போட்டு பிடித்தோம்: இணைப்பு விழாவில் முக ஸ்டாலின் பேச்சு

Last Modified ஞாயிறு, 21 ஜூலை 2019 (18:36 IST)
சமீபத்தில் தினகரனின் அமமுகவில் இருந்து திமுகவில் இணைந்த தங்கதமிழ்செல்வன் குறித்த இணைப்பு விழா இன்று தேனியில் நடைபெற்றது. இந்த விழாவில் தலைவர் முக ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்

இந்த விழாவில் அவர் பேசியபோது' தங்கதமிழ்ச்செல்வன் மாற்றுக்கட்சியில் இருக்கும்போதே சட்டமன்றத்தில் நான் பேசிய பேச்சுகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அவரது திறமையை பார்த்து இவரை எப்படியாவது திமுகவுக்கு இழுக்க நான் தூண்டில் போட்டேன் .ஆனால் தற்போதுதான் தங்கதமிழ்செல்வன் அந்த தூண்டிலில் சிக்கி உள்ளார் என்று நகைச்சுவையுடன் தெரிவித்தார்

மேலும் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக முதன்முதலில் திமுக கூறவில்லை என்றும், முதன்முதலில் இதனைக் கூறிய துணை முதல்வர் ஓபிஎஸ் தற்போது அமைதி காப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அதிமுகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்

தங்கதமிழ்செல்வனை தூண்டில் போட்டு பிடித்ததாக பொது மேடையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :