உண்டியல் பணத்தை நிதியாக கொடுத்த சிறுமிக்கு லேப்டாப் கொடுத்த முதல்வர்!
உண்டியல் பணத்தை நிதியாக கொடுத்த சிறுமிக்கு லேப்டாப் கொடுத்த முதல்வர்!
சைக்கிள் வாங்குவதற்காக மதுரை சிறுவன் சேர்த்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிதியாக கொடுத்ததை அடுத்து அந்த சிறுவனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் சைக்கிள் வாங்கி கொடுத்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
இந்த நிலையில் தற்போது லேப்டாப் வாங்குவதற்காக 10 வயது சிறுமி ஒருவர் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா நிதிக்காக கொடுத்ததை அடுத்து அந்த சிறுமிக்கு முதல்வர் லேப்டாப் வாங்கி கொடுத்துள்ளார்
விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி சிந்துஜா இவர் லேப்டாப் வாங்குவதற்காக சிறுக சிறுக பணம் உண்டியலில் சேர்த்து வைத்திருந்தார். அந்த பணம் ரூபாய் ஆயிரத்து 617 சேர்ந்த நிலையில் அந்த பணத்தை கொரோனா நிதிக்காக அவர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார் இதுகுறித்த தகவல் ஊடகங்களில் வெளியான நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அந்த சிறுமிக்கு புத்தம் புதிய லேப்டாப் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்
அதுமட்டுமின்றி தலைமைச் செயலாளர் இறையன்பு ஐஏஎஸ் அவர்கள் வழங்கிய பாராட்டுச் சான்றிதழ் ஒன்றும் அந்த சிறுமிக்கு வழங்கப்பட்டது