செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (19:50 IST)

வாட்ஸ்அப் மூலம் வாக்கு சேகரிக்கும் மு.க.ஸ்டாலின்

ஆர்.கே.நகர் வாக்காளர்களிடம் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாட்ஸ்அப் ஆடியோ மூலம் வாக்கு சேகரித்து வருகிறார்.

 
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அதிமுக, திமுக, சுயேட்சையாக போட்டியிடும் டிடிவி தினகரன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலில் ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.
 
தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மு.க.ஸ்டாலின் வாட்ஸ்அப் ஆடியோ மூலம் வாக்கு சேகரித்து வருகிறார். அன்பார்ந்த ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர்களே என தொடங்கி திமுக வேட்பாளர் மருதுகணேஷுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் நன்றி வணக்கும் என முடியும் ஆடியோ தற்போது வைரலாகி உள்ளது.
 
கருத்துக்கணிப்பில் டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு அமோகமாக உள்ளது தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் திமுக பல வழிகளில் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறது.