வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 17 டிசம்பர் 2017 (16:54 IST)

ஆர்ப்பரித்து அடங்கிய இலங்கை; இந்தியாவுக்கு 216 ரன்கள் இலக்கு

இந்தியா - இலங்கை அணிகள் இடையே நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 215 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இன்று விசாகப்பட்டினத்தில் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்தில் அடித்த அடியில் நிச்சயம் 300 ரன்களை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. 
 
தரங்கா மற்றும் சதீரா இலங்கை அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். இவர்களின் அதிரடியில் இலங்கை அணி நல்ல ரன் ரேட்டில் இருந்தது. இருவரும் ஆட்டமிழக்க இலங்கை அணியின் ரன் ரேட் சரிய தொடங்கியது. அதன்பின் களமிரங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இலங்கை அணி 44.5வது ஓவரில் 215 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆல் அவுட் ஆனது.
 
இதையடுத்து 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய களமிறங்க உள்ளது. எளிதான இலக்கு என்பதால் இந்திய அணி வெற்றி வாய்ப்பு அதிகளவில் உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.