வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (13:25 IST)

எழுத்தாளர்களுக்கு அரசு செலவில் வீடு! – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டை சேர்ந்த விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு அரசு செலவில் வீடு கட்டி தரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த தமிழ் இலக்கிய சூழலில் பெரும் பங்காற்றிய எழுத்தாளர்களை ஊக்குவிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார்.

அதன்படி தமிழகத்தை சேர்ந்த இலக்கியத்தில் பெரும் பங்காற்றி ஞானபீட விருது, சாகித்ய அகாடமி, மாநில இலக்கிய விருதிகள் மற்றும் உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு மூலமாக வீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.