1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 3 ஜூன் 2021 (13:02 IST)

தேவேந்திர குல வேளாளர் எனும் பெயரில் ஜாதிச் சான்றிதழ்!

தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயரில் 6 சாதியை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளர், தேவேந்திர குலத்தான், குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன் ஆகிய 6 சாதிகளுக்கு தேவேந்திர குல வேளாளர் எனும் பொதுப்பெயரில் சாதிச் சான்றிதழ் வழங்க சொல்லி தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  இம்மக்களின் நீண்ட கால கோரிக்கை பற்றி ஆய்வுக்குழு கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியது. அதன் பின்னர் அந்த அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஏப்ரல் 13 ஆம் தேதி குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில் இப்போது தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்தியுள்ளது.