வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் நடிப்பேன்: முக அழகிரி
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட முக அழகிரி கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்த நிலையில் தற்போது திடீரென மீண்டும் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிகிறது
முக அழகிரி பாஜகவில் இணைவார் என்றும் தனிக்கட்சி ஆரம்பிப்பார் என்றும் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று அளித்த பேட்டியில் ரஜினி கட்சியில் நீங்கள் இணைவீர்களா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது
இந்த கேள்விக்கு பதிலளித்த முக அழகிரி, ரஜினி படத்தில் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன் என்று மட்டும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பதிலை அடுத்து அவர் ரஜினி கட்சியில் இணைய வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது
மேலும் ரஜினியும் முக அழகிரியின் நெருங்கிய நண்பர்கள் என்றாலும் முக அழகிரி தனிக்கட்சி ஆரம்பிப்பார் அல்லது பாஜகவில் இணைவார் என்று கூறப்பட்டு வருகிறது