வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 டிசம்பர் 2020 (12:16 IST)

ரஜினியோடு கூட்டணி? ஆதரவாளர்களோடு ஆலோசனை! – மு.க.அழகிரி ப்ளான் என்ன?

எதிர்வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என கூறிய மு.க.அழகிரி, நடிகர் ரஜினிகாந்த்துக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சில ஆண்டுகள் முன்னதாக திமுகவில் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியை விட்டு நீங்கிய மு.க.அழகிரி மதுரையில் வசித்து வருகிறார். சமீபத்தில் மு.க.அழகிரி அரசியல் கட்சி தொடங்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில் அந்த தகவல் உண்மையில்லை என சொன்ன அழகிரி, ஆனால் தேர்தலில் தனது பங்களிப்பு இருக்கும் என்று மட்டும் சொல்லி இருந்தார்.

சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை அறிவித்ததற்கு மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனால் ரஜினியுடன் மு.க.அழகிரி இணைய போகிறார் என பேசிக்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பேசியுள்ள மு.க.அழகிரி “தேர்தலில் எனது பங்களிப்பு என்பது தனிக்கட்சியாகவோ, கூட்டணியாகவோ அல்லது ஓட்டு போடுவதாகவோ கூட இருக்கலாம். வாய்ப்பு கிடைத்தால் ரஜினியுடன் இணைந்து நடிக்கலாம். தேர்தல் குறித்து எனது ஆதரவாளர்களோடு ஆலோசனை நடத்த உள்ளேன்” என்று சூசகமாக பேசி சென்றுள்ளார். இதனால் தேர்தலில் மு.க.அழகிரியின் மனநிலை என்ன என்பது குறித்து அரசியல் வட்டாரத்தில் குழப்பம் எழுந்துள்ளது.