1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (13:28 IST)

ஓபிஎஸ் வீட்டில் என்ன நடந்தது? பேச மறுத்த அமைச்சர்கள்!

துணை முதல்வர் வீட்டில் ஆலோசனை குறித்த கேள்விக்கு பதிலளிக்க அமைச்சர்கள் மறுப்பு. 
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது.  
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். 
 
இந்த ஆலோசனை தற்போது முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால், துணை முதல்வர் வீட்டில் ஆலோசனை குறித்த கேள்விக்கு பதிலளிக்க அமைச்சர்கள் மறுத்துவிட்டனர்.  
 
அடுத்து மூத்த அமைச்சர்கள் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் என தெரிகிறது.