1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (12:11 IST)

முதல்வர் வேட்பாளர் யார்? ஓபிஎஸ் இல்லத்தில் குழுமிய அமைச்சர்கள்!

முதல்வர் வேட்பாளர் யார் என முடிவெடுக்க அதிமுக அமைச்சர்கள் ஈபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோருடன் ஆலோசனை என தகவல். 
 
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவாதம் எழுந்தது. இதுகுறித்து பொதுவெளியில் அதிமுக அமைச்சர்கள் சிலர் ஆளுக்கொரு கருத்து கூறியதால் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்கள் எழ தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில் முதல்வர் வேட்பாளர் யார்? என துணை முதல்வர் ஓ.பி.எஸ் இல்லத்தில் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
அதோடு துணை முதல்வருடனான ஆலோசனைக்குப் பின் அமைச்சர்கள் முதலமைச்சருடன் ஆலோசிப்பார்கள் என தகவல். அதன்படி, மூத்த அமைச்சர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்த உள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.