ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 24 பிப்ரவரி 2020 (21:24 IST)

அதிகாரியை மாற்றி கூறிய அமைச்சர், தூங்கிய அதிகாரி: சென்னை விழாவில் பரபரப்பு

அதிகாரியை மாற்றி கூறிய அமைச்சர், தூங்கிய அதிகாரி
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவரை சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் என அமைச்சர் மாற்றி கூறியதும் அந்த விழாவில் அதிகாரி ஒருவர் தூங்கி விழுந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னையில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு முதிர்வு தொகையை சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா வழங்கினார். சாலிகிராமத்தில் நடைபெற்ற பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் சரோஜா, 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு வட்டியுடன் கூடிய முதிர்வுத் தொகையை வழங்கினார்
 
இந்த விழாவில் அவர் பேசியபோது சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியை சேலம் மாவட்ட ஆட்சியர் என மாற்றி கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்த விழாவில் கலந்து கொண்ட சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஒருவர் தூங்கியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் தூங்கியதை பார்த்து அருகில் உள்ள அதிகாரி ஒருவர் அவரை தட்டி எழுப்பியது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
அரசு விழா ஒன்றில் கலெக்டர் பெயரை மாற்றி கூறிய அமைச்சர் குறித்தும், தூங்கிய அதிகாரிகள் குறித்தும் நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்