1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 29 நவம்பர் 2020 (15:32 IST)

ரஜினியின் முடிவை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம்: அமைச்சர் ஆர்பி உதயகுமார்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் எட்டு மாதங்களுக்கு பின்னர் நாளை வெளியே வரப் போகிறார் என்பதும் நாளை நடைபெற இருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பதும் தெரிந்ததே 
 
நாளை ரஜினியின் அரசியல் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ரஜினியின் அரசியல் முடிவு குறித்து அதிமுக அமைச்சர்கள் அவ்வப்போது விமர்சனம் செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் தற்போது அமைச்சர் ஆர்பி உதயகுமார் இதுகுறித்து கூறிய போது ரஜினிகாந்த் நல்ல மனிதர் அவர் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்
 
ஏற்கனவே ரஜினிகாந்தின் தெளிவான முடிவை எடுப்பார் என்றும் அவர் எந்த முடிவை எடுத்தாலும் எங்களுக்கு சந்தோஷம்தான் என்றும்  அவர் கட்சியை ஆரம்பித்த உடன் தான் அவரது கொள்கைகள் குறித்த விவரங்கள் தெரிய வரும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது