1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 25 நவம்பர் 2020 (21:31 IST)

புயல் நேரத்திலும் அரசியல் செய்யும் திருமாவளவன்: முதல்வருக்கு கேள்வி

தமிழகத்தை நோக்கி நிவர் புயல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களாகவே தமிழக அரசு சுறுசுறுப்பாக செயல்பட்டு நிவர் புயலால் ஏற்படும் சேதங்களை கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது
 
தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு பெரும்பாலான பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் எதிலும் அரசியல் செய்யும் அரசியல் கட்சியினர் நிவர் புயலிலும் அரசியல் செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி ஒன்றை எழுப்பி உள்ளார். புயல்மழை பருவகாலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பு ஏற்கனவே தமிழக அரசிடம் அளித்த அறிக்கையை தமிழக அரசு செயல்படுத்தாதது ஏன் என்று தமிழக முதல்வர் விளக்க வேண்டும் என கேள்வி எழுப்பியுள்ளார் 
 
இந்த கேள்விக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் புயல் நேரத்தில் தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்