திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:27 IST)

தமிழகத்தில் கேன் தண்ணீர் தரம் கண்காணிக்கப்படும்: அமைச்சர் மா சுப்பிரமணியன் உத்தரவு..!

Cane water
தமிழகத்தில் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படும் தண்ணீரின் தரம் குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்படும் என சுகாதாரத் துறை அமைச்சர் மசுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
சென்னை உள்பட பல நகரங்களில் பெரும்பாலான மக்கள் தற்போது கேன் தண்ணீரையே குடித்து வருகின்றனர். ஒரு சில நிறுவனங்கள் தரம் மற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பனை செய்வதாக அவ்வப்போது புகார் வந்து கொண்டிருக்கின்றது. 
 
இந்த நிலையில் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இது குறித்து கூறிய போது தமிழ்நாட்டில் கேனில் அடைத்து விற்கப்படும் தண்ணீர் தரமாக உள்ளதா என கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பல நிறுவனங்கள் தரமற்ற தண்ணீரை கேனில் அடைத்து விற்பதாக புகார் வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva