திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2019 (09:43 IST)

நாங்கள் ஆட்சிக்கு வந்தால்..! ‘வாய்ப்பில்லை ராஜா!’ – கலாய்த்து தள்ளிய ஜெயக்குமார்!

சீமான் தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என பேசியது குறித்து கிண்டலாக பதில் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

மாவீரர் நாளன்று மதுரையில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ‘நாம் தமிழருக்கு எதிராக வழக்கு தொடுப்பவர்கள், போஸ்டரை கிழிப்பவர்கள் நான் ஆட்சிக்கு வருவதற்குள் இறந்து விடுங்கள்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் மிரட்டல் விடுக்கும் தோனியில் சீமான் பேசியதற்கு கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறிய போது :”சீமான் ஆட்சிக்கு வருவேன் என்று கூறுவது, கடல் வற்றி, கொக்கு கருவாடு திண்பது போல நடவாத காரியம்” என்று கூறியுள்ளார்.

மேலும் சிலர் சீமான் மிரட்டல் விடுக்கும் தோனியில் பேசியதற்கு எதிராக வழக்கு தொடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.