திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (12:20 IST)

5 மணிநேரமும் ஆரோக்யமான விவாதம் நடந்தது – அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

நேற்று நடந்த அதிமுக செயற்குழு கூட்டத்தில் ஆரோக்யமான விவாதம் நடந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஸ் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளது. அதற்கு மிக முக்கியக் காரணம் 2021 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபைத்  தேர்தலில் யாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்துவது என்பதில் ஏற்பட்ட குழப்பம்தான் என சொல்லப்படுகிறது. இதனால் அதிமுக தொண்டர்கள் இடையே கூட சலசலப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று  நடைபெற்ற அதிமுக செயற்குழு 5 மணிநேரம் நடந்தது எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செயற்குழு கூட்டம் பற்றி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ‘செயற்குழு கூட்டத்தில் 5 மணிநேரமும் ஆரோக்யமான, ஜனநாயகமான விவாதம் நடந்தது. சசிகலா குறித்து விவாதிக்கவில்லை. முதல்வர் வேட்பாளர் யார் என்பது அக்டோபட்ர் 7 ஆம் தேதி அறிவிக்கப்படும்’ எனக் கூறியுள்ளார்.