1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 20 டிசம்பர் 2023 (12:06 IST)

தென்மாவட்ட மழையால் 10, +2 பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா? அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தென் மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கன மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ மாணவிகளின் புத்தகங்கள் அனைத்தும் சேதமடைந்துவிட்டதாக கூறப்படுவதால் அவர்களது கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. 
 
இந்த நிலையில்  தென் மாவட்டங்களில் மழையால் பாட புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச பாட புத்தகங்களை வழங்க தேவையான புத்தகங்களை கையிருப்பில் உள்ளதாகவும் நிலைமை இயல்புக்கு திரும்பியவுடன் புத்தகங்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 
 
ஆனால் அதே நேரத்தில் 10,11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தேதியில் எந்த விதமான மாற்றமும் இல்லை என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதியில் பொது தேர்வு நடைபெறும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran