44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.. தமிழகத்திற்கு வந்த சோதனை..!
தமிழகத்தில் உள்ள 44 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்றும், 35 கல்லூரிகளில் மிக மிக குறைவான மாணவர் சேர்க்கை நடந்திருக்கிறது என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி அளித்திருப்பது அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் மேலும் கூறியபோது, ஒரு மாணவர் கூட சேராத கல்லூரிகள் மற்றும் குறைவாக மாணவர்கள் உள்ள கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கங்களை பெற்றிருக்கிறோம் என்றும் தற்போது நேரில் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் எங்களுக்கு திருப்தி அளிக்காவிட்டால் வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் முற்றிலுமாக நிறுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பொறியியல் படிப்புக்கு நாளுக்கு நாள் மாணவர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதாக கூறப்பட்டாலும் கல்லூரி என்ற பெயரில் எந்த விதமான வசதியும் இல்லாமல் இருக்கும் கல்லூரிகளில் தான் மாணவர்கள் சேர ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
Edited by Mahendran