திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 17 ஜனவரி 2018 (10:49 IST)

எம்ஜிஆர் 101வது பிறந்தநாள்; முதலமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திரைப்பட நடிகராக மக்களுக்கு அறிமுகமான எம்.ஜி.ஆர், அரசியலிலும் செல்வாக்குப் பெற்று மூன்று முறை தமிழகத்தின் முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக விற்கு ஆதரவாக இருந்த எம்ஜிஆர் அக்கட்சியில் ஏற்பட்ட  முரண்பாடுகள் காரணமாக, 1972 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து வெளியேறி அதிமுக (அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்) என்ற பெயரில் புதிய கட்சியொன்றை ஆரம்பித்தார். எல்லா மாநிலங்களிலும் அதிமுக வளர்ந்தமையால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்றேற்றக் கழமாக பெயர் மாற்றப்பட்டது. 1977, 1980, 1984 ஆகிய மூன்று ஆண்டுகள் நடந்த தேர்தலில் தொடர்ந்து வெற்றிப்பெற்று எம்ஜிஆர் தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்தார். 17-01-1917 ஆம் ஆண்டு பிறந்த எம்ஜிஆர், 24-12-1987-ல் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார்.
 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி, கிண்டியிலுள்ள எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அமைச்சர்கள் உட்பட அதிகாரிகள் பலரும் எம்ஜியாருக்கு மரியாதை செலுத்தினர்.