Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்யாவுக்கு ஜெயம் ரவி கொடுக்க இருக்கும் பர்த்டே கிஃப்ட் என்ன தெரியுமா?

Last Modified புதன், 29 நவம்பர் 2017 (13:40 IST)
ஆர்யாவின் பிறந்த நாளுக்கு, அருமையான பர்த்டே கிஃப்ட்டைக் கொடுக்க இருக்கிறார் ஜெயம் ரவி.
‘மிருதன்’ படத்தைத் தொடர்ந்து சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்துள்ளார் ஜெயம் ரவி. அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சிங்கப்பூர் நடிகர் ஆரோன் ஆசிஸ் வில்லனாக நடிக்க, ஜெயம் ரவியின்  மகன் ஆரவ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.
 
இந்தப் படத்தின் முதல் பாடல் டிசம்பர் மாதம் 11ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று ஆர்யாவின் பிறந்தநாள். எனவே, ஜெயம் ரவியை ட்விட்டரில் கலாய்த்துள்ளார் ஆர்யா.
 
“நீ என்னை ரொம்ப லவ் பண்றேன்னு எனக்கு நல்லா தெரியும். ஆனாலும், இதெல்லாம் டூ மச் டார்லிங். பர்த்டே கிஃப்ட்டுக்கு  நன்றி” என விளையாட்டாகக் கூறியுள்ளார் ஆர்யா.


இதில் மேலும் படிக்கவும் :