23ஆம் தேதி வரை 4 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
இன்று முதல் வரும் 23ஆம் தேதி வரை நான்கு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது
நீலகிரி கோவை தேனி சேலம் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று முதல் 23ம் தேதி வரை நல்ல மழை பெய்யும் என்றும் அதேபோல் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர் திண்டுக்கல் தேனி தென்காசி மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அதேபோல் 24-ஆம் தேதி முதல் தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழையும் முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அரபிக்கடல், வங்கக்கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது