மழையால் பாதிக்கப்பட்ட போட்டி…. டாஸ் போடுவதில் தாமதம்!
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் இரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. உலகின் புகழ் பெற்ற மைதானமான இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த தொடர் நடக்க உள்ளது. இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் 3 மணிக்கு தொடங்க இருந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் இன்னும் போட்டிக்கான டாஸ் போடப்படவில்லை.