வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 9 அக்டோபர் 2021 (12:39 IST)

தடுப்பூசிக்கு மெகா பரிசு - மதுரையில் கலைக்கடும் மெகா முகாம்!!

தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து பரிசு வழங்க திட்டம். 
 
தமிழகத்தில் ஞாயிற்றுகிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த வாரமும் 5வது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  
 
இதனிடையே நாளை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து அவர்களுக்கு சைக்கிள், மிக்ஸி, குக்கர் மற்றும் சில்வர் பாத்திரங்களை வழங்குவதாக மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் அறிவித்துள்ளது.
 
இதேபோல பல்வேறு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பரிசுகள் வழங்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னோட்டமாக இந்தப் பரிசுப் பொருட்கள் ஆட்சியரகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.