வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 19 ஜூலை 2019 (12:26 IST)

மயிலாடுதுறையை தனிமாவட்டமாக அறிவிக்க வேண்டும் – பொதுமக்கள் போராட்டம் !

தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்களை தனி மாவட்டமாக அறிவித்ததை அடுத்து மயிலாடுதுறையையும் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவியேற்ற பின்னர் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு புதிய மாவட்டங்கள் குறித்த அறிவிப்பை இன்று சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அதையடுத்து நேற்று தென்காசி மற்றும் செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களை அறிவித்தார். இதனை அப்பகுதி மக்கள் கொண்டாடி வரும் வேளையில்  மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க சொல்லி அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இதையடுத்து மயிலாடுதுறையில் தனி மாவட்டம் கோரிக்கையை வலியுறுத்தி பொது தொழிலாளர் சங்கம் சார்பில் மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மயிலாடுதுறை, சீர்காழி, குத்தாலம், செம்பனார்கோவில் உள்ளிட்ட மயிலாடுதுறை வருவாய் கோட்டத்துக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இன்று(ஜூலை 19) கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.