1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 23 ஜனவரி 2019 (16:48 IST)

கொலைகளுக்கு பின்னணியில் யார்? எடப்பாடியாரை ரவுண்ட் கட்டும் மேத்யூ

என் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என பட்டியலிடும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கொலைகளுக்கு பின்னர் யார் இருக்கிறார்கள் என்பதை ஏன் தெரிவிக்கவில்லை என கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். 
 
கொடநாடு எஸ்டேட்டில் நடந்த 5 மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை விவகாரத்திற்கு பின்னணியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பிருப்பதாக தெஹல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் பரபரப்பு வீடியோ ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டார். 
 
இந்த வீடியோவில் கொடநாடு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு உள்ளதாகவும். அங்கு கொள்ளையடிக்க அனுப்பியதே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிதான் என மனோஜும் சயானும் வாக்குமூலம் அளித்தனர். 
ஆனால், இந்த குற்றசாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி மறுத்துள்ளார். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து சயோன் மற்றும் மனோஜ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் என் பின்னணியில் யார் உள்ளார்கள் என கூறும் என கூறும் எடப்பாடி 5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது. அதேபோல் எனக்கு ஆறுமுகசாமி ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.