வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 7 ஜூலை 2023 (16:33 IST)

ஏற்கனவே திருமணமானவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்தாரா அண்ணாமலை? பரபரப்பு தகவல்..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடத்திய நிலையில் அதில் சிலருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. 
 
விழுப்புரத்தில் நேற்று முன்தினம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் 39 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
 
இதில் மூன்று ஜோடிகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி ஒரு ஜோடிக்கு குழந்தை உள்ளது என்றும் அந்த குழந்தையின் முதலாவது பிறந்தநாள் நேற்று தான் கொண்டாடப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva