செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 பிப்ரவரி 2018 (23:15 IST)

கார்த்திக் சிதம்பரத்தை அடுத்து குறி வைக்கப்படும் மாறன் சகோதரர்கள்

ஐ.என்.எஸ் மீடியா வழக்கில் இன்று கைது செய்யப்பட்ட கார்த்திக் சிதம்பரத்தை இன்று மாலை அமலாக்கத்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் வலுவான ஆதாரங்கள் இருப்பதால் கார்த்திக் சிதம்பரம் தப்புவது கடினம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் கார்த்திக் சிதம்பரத்தை அடுத்து மாறன் சகோதரர்களான கலாநிதி மாறன் மற்றும் தயாநிதி மாறன் மீதான வழக்குகளில் பிடி இறுகுவதாக கூறப்படுகிறது.  மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, கலாநிதி மாறனின் சன் டிவிக்கு சென்னை பி.எஸ்.என்.எல்லின் அதி விரைவு தொலைபேசியின் இணைப்புகளை முறைகேடாக வழங்கியதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களை விடுதலை செய்யக்கூடாது என சிபிஐ தரப்பில் இன்றைய விசாரணையின்போது வலியுறுத்தப்பட்டது. இன்றைய இருதரப்பினர் வாதங்களுக்கு பின்னர்  இரு தரப்பினரும் தங்களின் வாதங்களை மார்ச் 6 தேதி எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.