1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (12:34 IST)

தடையை மீறி மஞ்சுவிரட்டு… போலிஸைக் கண்டதும் ஓட்டம்!

கோப்புப் படம்

திருப்புத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டி எனும் ஊரில் தடையை மீறி மஞ்சுவிரட்டு நடத்த போலிஸ் சென்று அவர்களை களையச் செய்துள்ளனர்.

திருப்புத்தூர் அருகே பூங்குன்றநாடு என்கிற மகிபாலன்பட்டி எனும் ஊரில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் அம்மனுக்கு பூத்திருவிழா நடத்துவது வழக்கம். அதை ஒட்டி மஞ்சுவிரட்டு போட்டியும் நடக்கும். ஆனால் கொரோனா காரணமாக வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதால் போலீஸ் அனுமதி மறுத்துள்ளது. ஆனால் தடையை மீறியும் அந்த ஊர் மக்கள் நடத்த போலிஸாருக்கு தகவல் செல்ல, அங்கு விரைந்து செல்ல அவர்களை பார்த்த மக்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர்.