செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 26 ஏப்ரல் 2021 (16:14 IST)

கொரோனா வார்டாக மாறும் உச்சநீதிமன்றம் - தலைமை நீதிபதி அனுமதி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அடித்துக் கொண்டிருக்கிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் போதிய சிகிச்சை அளிப்பதில் பெரும் சிரமமாக உள்ளது. நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், மருத்துவமனையில் சிகிச்சைக்கான படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் விநியோகத்தின் மீது மிகக் கடுமையான அழுத்தம்  ஏற்பட்டிருக்கிறது.
 
இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையை சமாளிக்க உச்ச நீதிமன்ற வளாகத்தில் படுக்கை வசதிகள்,  ஆர்டிபிசி ஆர்  சோதனை செய்வதற்கான வசதிகள் ஆகியவற்றை மேற்கொள்ள தலைமை நீதிபதி அனுமதி அளித்துள்ளார். இதற்காக மே 7 ஆம் தேதி முதலே உச்சநீதிமன்றம் விடுமுறை விடப்பட்டுள்ளது.