ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 2 செப்டம்பர் 2019 (09:13 IST)

கால்வாய் அருகில் ரகசியக் கேமராவோடு நின்ற பைக் – தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் !

கன்னியாகுமரி பகுதியில் கால்வாயில் குளிக்கும் பெண்களை ரகசியமாக வீடியோ எடுத்த இளைஞரை பிடித்த பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலிஸில் ஒப்படைத்துள்ளனர்.

கன்னியாகுமரியில் உள்ள தோவாளை கால்வாயில் இப்போது தண்ணீர் பெருக்கு உள்ளதால் அதில் பொதுமக்கள் குளித்து வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் குளிக்கும் பகுதிக்கு அருகில் சில தினங்களாக ஒரு பைக் நின்றுள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண்கள் சந்தேகமடைந்து ஊரில் உள்ள ஆண்களிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளனர்.

அதைக் கேட்ட ஆண்கள் அடுத்த நாள் இதை ரகசியமாகக் கவனிக்க ஆரம்பித்தனர். அப்போது பெண்கள் குளிக்கும்போது அங்கு பைக்கை வந்து நிறுத்திய அந்த நபர், பின்னர் எங்கோ சென்றுவிட இடையில் வந்து வண்டியில் எதையோ சரிபார்த்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அவரைப் பிடித்து ஊர் மக்கள் விசாரிக்க முன்னுக்குப் பின் முரணாக பதில் சொல்ல, அடி வெளுத்து வாங்கியுள்ளனர். இதனால் மோட்டார் பைக் ஹாண்டில்பாரில் கேமரா வைத்து ரகசியமாகப் படம் பிடித்ததை அவர் ஒத்துக் கொண்டுள்ளார்.  இதைக் கேட்டதும் அரண்டு போன பொதுமக்கள் அவரை போலிஸில் ஒப்படைத்துள்ளனர்.