வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2019 (15:57 IST)

ஊருக்குள் மீண்டும் புகுந்த கடல் நீர்: மக்களின் நிலை என்ன?

கன்னியாகுமரியில் மீண்டும் வீடுகளுக்குள் கடல் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதிகளில் ஜூலை, ஆகஸ்து ஆகிய மாதங்களில் கடல் சீற்றம் ஏற்படும் போது கடல் நீர் கடலோர கிராமத்துக்குள் புகுவது வழக்கமான ஒன்று. அதே போல்  ராஜாக்கமங்கலத்தை அடுத்த அழிக்கால் மீனவ கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடல் சீற்றம் ஏற்பட்டது.

ஆனால் கடல் நீருடன் கடல் மணலும்சேர்ந்தே ஊருக்குள் புகுந்தது. இந்த மணல் அந்த பகுதிகளில் உள்ள வீடுகளில் மலை போல் குவிந்தது. அவற்றை அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு அகற்றினர். இந்நிலையில் மீண்டும் இன்று காலையில் கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் நீர் கடல் மணலோடு ஊருக்குள் புகுந்தது. கடல் நீர் புகுந்ததால் அப்பகுதியில் உள்ள வீடுகளில் குடியிருந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம் பெயர்ந்தனர். இதில் சுமார் 75 க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.