செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 6 மார்ச் 2023 (23:00 IST)

இரண்டு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

prison
கரூர் அருகே இரண்டு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் செய்த நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்த மகளிர் கரூர் விரைவு நீதிமன்றம்:

கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள கிராமத்தில் கூலி வேலை செய்து வரும் பெண் இவருக்கு 6வயது மற்றும் 4 வயது பெண் குழந்தைகள் உள்ளது.
 
வேலைக்கு செல்லும் தாய் தனது (தாய்) குழந்தைகளின் பாட்டியிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது வழக்கம்.
 
இந்த நிலையில் கடந்த 14-09-2020 குழந்தையின் பாட்டி வீட்டில் இல்லாத போது அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அத்துமீறி குழந்தைகள் இருக்கும் வீட்டில் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார்.
 
கதறி அழுந்த குழந்தைகள் தாயுடன் சொல்லி கூறியுள்ளார்,பதட்டம் அடைந்த தாய் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரின் படி சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு வழக்கானது நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணையில் நடைபெற்று வந்தது.
 
விசாரணை தொடர்ந்து இரண்டு குழந்தைகள் மீது பாலியல் துன்புறுத்தல் செய்த சீனிவாசன் என்பவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை 2000 ரூபாய் அபராதமும் மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இரண்டு லட்சம் தமிழக அரசு வழங்கவும் கரூர் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.