1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (17:50 IST)

காலையில் அமமுகவில் இருந்து நீக்கம்.. மாலையில் அதிமுகவில் இணைப்பு..!

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக கட்சியின் ஒரே பேரூராட்சி தலைவர் மா சேகர் இன்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் அவர் எடப்பாடி பழனிச்சாமி முன் அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரத்தநாடு பேரூராட்சி தலைவர் சேகர் என்பவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் இன்று காலை அறிவித்து இருந்தார். அவருடன் கட்சியினர் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார் 
 
இந்த நிலையில் அமமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மா சேகர் சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதேபோல் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் ஆசைத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சிவ ராஜேஷ் கண்ணன் ஆகியோர்களும் அதிமுகவில் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva