ஈபிஎஸ்-ஐ அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்தது தேர்தல் ஆணையம்.. ஓபிஎஸ்-க்கு பின்னடைவு..!
அதிமுக பொதுச்செயலாளராக சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவரை அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றையும் எழுதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் வழங்கியதை அடுத்து கர்நாடக மாநில தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியின் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதிமுகவின் பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் ஏற்கப்படுவதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கக் கூடாது என்ற ஓபிஎஸ் வாதம் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் இது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran