Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எங்களையும் அழைத்து செல்லுங்கள்: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை

MK Stalin
Last Modified வியாழன், 1 பிப்ரவரி 2018 (06:15 IST)
காவிரி பிரச்சனை தொடர்பாக முதல்வரை நேரில் சந்திக்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்நாடக முதல்வரை சந்திக்க செல்லும்போது எதிர்க்கட்சி தலைவர்களையும், விவசாயிகளையும் முதல்வர் அழைத்து செல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்

நேற்று தனது சொந்த தொகுதியான
கொளத்தூரில் ஆய்வு நடத்திய ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் இதுகுறித்து கூறியதாவது: காவிரி தண்ணீர் பெறுவதற்காக கர்நாடக முதல்வரை, தமிழக முதல்வர் சந்திக்க நேரம் கேட்டிருப்பது வரவேற்கப்பட வேண்டியது. அவரை சந்திக்கப் போகிறாரா, இல்லையா என்பது வேறு; என்றாலும், இதை முன்கூட்டியே அவர் செய்திருக்க வேண்டும். காலம் கடந்து இப்போதாவது இதனை மேற்கொண்டிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான். தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களையும், தமிழக விவசாய சங்கங்களின் நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று, கர்நாடக மாநில முதல்வருக்கு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, சிறிது பயனிருக்கும் என்பது எனது நம்பிக்கை. அது மட்டுமல்ல, தேவைப்பட்டால் இங்கிருக்கும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் முதல்வர் ஒன்று திரட்டி, தில்லிக்கு அழைத்துச் சென்று, பிரதமரையும் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும்.


இதில் மேலும் படிக்கவும் :