Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அடுத்த கல்வியாண்டு முதல் சாலைவிதிகள் பாடம் அறிமுகம்: கர்நாடகா அறிவிப்பு

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (23:41 IST)
வரும் கல்வி ஆண்டான 2019-2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளில் சாலை விதிகள் குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்த பாடத்தில் சாலைவிதிகள், விதிகளை மீறினால் கிடைக்கும் தண்டனை, பாதுகாப்பான பாதசாரிகள் போன்றவை இருக்கும் என்றும், இந்த பாடத்தை அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகள் என அனைத்து தரப்பு பள்ளிகளும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.

மேலும் இந்த பாடத்தை மாணவர்களுக்கு புரியும் வகையில் சொல்லி கொடுக்க ஆசிரியர்களுக்கு விரைவில் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் இந்த புதிய முயற்சியை தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :