புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (12:25 IST)

கட்டாயத் திருமணம் பிடிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பெண் -காதலன் கவலைக்கிடம் !

திருமணம் செய்து வைக்கப்பட்ட பின் தன் காதலனோடு சேர்ந்து விஷம் குடித்ததில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கால பெருமாள்பட்டி எனும் ஊரில் வசிக்கும் முருகன் என்பவரின் மகள் ரஞ்சிதா.  தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வந்த இவர் சக மாணவனான மனோஜ் பாண்டியன் என்பவரை காதலித்துள்ளார். இந்த விஷயம் ரஞ்சிதாவின் பெற்றோருக்கு தெரிய வர படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு அவசரஅவசரமாக அவருக்கு உறவினர் ஒருவர் ஒருவரோடு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

திருமணம் நடந்தாலும் தனது காதலனை மறக்க முடியாத அவர் மனோஜ வரச்சொல்லி தனிமையில் சந்தித்து இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். தோப்பு ஒன்றில் மயங்கிய நிலையில் கிடந்த அவர்கள் இருவரையும் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி ரஞ்சிதா நேற்று காலை மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது காதலன் மனோஜ் பாண்டியன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.