வியாழன், 2 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 செப்டம்பர் 2024 (13:29 IST)

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

udhayanidhi
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 2874.26 கோடி மதிப்பீட்டில் கடன் உதவி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
புதிய 500 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.101 கோடி மதிப்பில் கடனுதவி செய்யப்படும் என்றும், 25,000க்கும் மேற்பட்டோருக்கு ரூ.297 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவி செய்துள்ளதாகவும்  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
 
மேலும் வருவாய்த்துறை மூலம் 12,233 பேருக்கு ரூ.75.60 லட்சம் மதிப்பிலான இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், அரசு எப்படி செயல்படுகிறது என்பதை தேர்தல் என்ற தேர்வு மூலம் மக்கள் மதிப்பெண் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
 
கடந்த மக்களவை தேர்தலில் திராவிட மாடல் அரசுக்கு 100% தேர்ச்சி அளித்தீர்கள், தென் மாவட்ட மக்கள் மகிழும் அளவிற்கு மதுரைக்கு பல்வேறு திட்டங்கள் இயற்றப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
 
 
Edited by Mahendran