1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 4 செப்டம்பர் 2024 (11:29 IST)

வடகிழக்கு பருவமழை.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம்..!

udhayanidhi
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்று வருவதாகவும் இதில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு பருவமழை ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் நிலையில் இந்த மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது

வடகிழக்கு பருவமழை குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு கூட்டம் ஏற்கனவே ஒரு முறை நடந்த நிலையில் இன்று இரண்டாவது முறையாக சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த 2வது ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சற்றுமுன் தொடங்கியதாகவும், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்று வரும் ஆய்வுக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா ராஜன், மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

Edited by Mahendran