செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (17:14 IST)

வண்டலூர் பூங்காவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

வண்டலூர் பூங்காவில் இருக்கும் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வரும் நிலையில் இதுவரை மனிதர்களுக்கு மட்டுமே பாதிப்புக் கண்டுபிடிக்கபட்டு வந்தது. இந்நிலையில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருக்கும் 9 சிங்கங்களுக்கு இப்போது கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில் மீனா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து மற்ற சிங்கங்களுக்கும் சோதனை செய்யவும், பாதிப்பு ஏற்பட்டுள்ள சிங்கங்களை தனிமைப்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே போல ஊழியர்களும் கொரோனா சோதனை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.