செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (21:57 IST)

குரங்கணி தீ விபத்து: பலி எண்ணிக்கை 21ஆக உயர்வு

தேனி மாவட்டத்தில் உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் சமிபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சம்பவ தினத்தன்றே 9 பேர் பரிதாபமாக தீயில் கருகி பலியாகினர்.

அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஒவ்வொருவராக பலியாகி வந்த நிலையில் கடந்த வெள்ளி வரை மொத்தம் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்தது

இந்த நிலையில் இன்று சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பலியானதை அடுத்து பலி எண்ணிக்கை 21ஆக உயர்ந்துள்ளது. இன்று சென்னை  வானகரம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்கவி என்ற 26 வயது பெண் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.