வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 பிப்ரவரி 2022 (16:06 IST)

கோவில்பட்டி பட்டாசு ஆலையில் தீ விபத்து: 4 பேர் பலி!

கோவில்பட்டி அருகே உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கோவில்பட்டி அருகே துறையூர் என்ற பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த ஆலையில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அந்த கட்டிடமே நொறுங்கி விழுந்தது
 
 இந்த பட்டாசு ஆலையில் பணிபுரிந்து கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக தீயில் கருகி பலியாகினர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தீ விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
கோவில்பட்டி சிவகாசி விருதுநகர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டு வருவது அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது