வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 19 ஆகஸ்ட் 2018 (12:49 IST)

94 வருட கொள்ளிடம் பாலம் இரண்டாக உடைந்தது

அதிக வெள்ளப்பெருக்கின் காரணமாக திருச்சி கொள்ளிடம் பாலம் இரண்டாக இடிந்து விழுந்தது.
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றுக்கு கூடுதல் நீர் திறக்கப்பட்டு வருகிறது. முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து 2.27 லட்சம் கனஅடியில் இருந்து 2.34 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் திருச்சி கல்லணைக்கும் கொள்ளிடம் அணைக்கும் தண்ணீர் அதிகமாக வருகிறது.
 
இந்நிலையில்தான் 1924 ஆம் ஆண்டு கட்டப்பட்ட திருச்சி கொள்ளிடம் இரும்பு பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. 23 தூண்களை கொண்ட பாலத்தின் 18-வது தூணில் விரிசல் ஏற்பட்டது. 19வது தூணும் சரிந்திருந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாலம் இரண்டாக உடைந்தது.