புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 21 டிசம்பர் 2020 (09:58 IST)

கடலுக்கு செல்லும் முன் கற்பூர பூஜை; பற்றி எரிந்த படகு! – காசிமேட்டில் பரபரப்பு!

சென்னை காசிமேடு துறைமுகத்தில் கடலுக்கு செல்ல படகுக்கு பூஜை செய்தபோது கற்பூரம் பற்றி படகு எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதத்தில் தொடர்ந்து இரண்டு புயல்கல் வீசியதால் கடலுக்கு மீனவர்கள் அதிகம் செல்லாத நிலையில் தற்போது பருவக்காற்று குறைந்துள்ளதால் பலர் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் காசிமேடு மீனவர்களும் கடந்த சில வாரங்களாக கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். மீனவர்கள் கடலுக்குள் செல்லும் முன்னர் படகிற்கு பூஜை செய்து வழிபட்டு பின்னர் புறப்படுவது வழக்கம். வழக்கம்பொல காசிமேடு துறைமுகப்பகுதியில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல இருந்த விசைப்படகு ஒன்றில் பூஜை செய்யப்பட்டுள்ளது. கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்த போது கற்பூரம் படகில் விழுந்து தீப்பற்றியது. தீயை அணைக்க பலர் முயன்றும் மளமளவென பரவிய தீ படகு முழுவதையும் பற்றிக் கொண்டது. துறைமுக தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தும் படகு முழுவதும் எரிந்து போனதால் மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.